கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (17) வியாழக்கிழமை  விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன், வீ.கலையரசன், கல்முனை பிரதேச செயலாளர்களான எம்.எச்.எம்.கனி, கே .லவநாதன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட கல்முனை மாநகர சபை தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வட்ட விதாணைமார் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் கொண்டிருந்த அதிருப்திக்கான காரணங்களை கேட்டறிந்த  பிரதி அமைச்சர்  அதற்கான  உத்தரவாதங்களை வழங்கியதோடு, இத்திட்டத்தினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படாதவாறு தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படும் என அவர் தெரிவித்தார் 


கருத்துரையிடுக

 
Top