விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்கவுக்குமிடையேயான சந்திப்பு நேற்று (28) திங்கட்கிழமை அம்பாறை கச்சேரியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ் மருதமுனையிலுள்ள மோட்டுவட்டை சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள 81 வீடுகளை பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்கு உடன் வழங்குவதற்கு முறையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரைப் கேட்டுக் கொண்டார். 

மேலும் பொத்துவில் விவசாயிகளின் கரண்கோ காணியினை செய்கை பண்ணுவதற்கு விடுவிப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்;;டதுடன் இவ்விடயம் சம்பந்தமாக அரசாங்க அதிபர் தலைமையில் பொத்துவில், லகுகல பிரதேச செயலாளர்கள் மற்றும் வனவள அதிகாரிகளை அழைத்து பேசிய பின்னர் இக்காணிகளை வழங்குவது சம்பந்தமாக இறுதி முடிவுக்கு வருவது என தீர்மானிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top