(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை றகுமான் ஏ ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான  ‘தாளில் பறக்கும்  தும்பி; கவிதை நூல் வெளியீட்டு விழா சமீபத்தில்  மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் மர்ஹூம் மருதூர் கொத்தன் நினைவரங்கில் நடைபெற்றது.
உதவிக் கல்விப் பணிப்பாளர் சத்தார் எம் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார்.அதிதியாக  பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கலந்து சிறப்பித்தார். 
நூல் அறிமுக உரையை சட்டத்தரணி ஏ.எல்.றிபாஸ் நிகழ்த்தினார். நூல் பற்றிய கருத்துரைகளை கவிதாயினி மண்டூர் உருத்ரா,விமர்சகர் சிராஜ் மஸ்ஹூர்,கதைஞர் திசேரா ஆகியோர் வழங்கினார்கள். நூலின் முதன்மை பிரதிகளை ஆசிரியர்களான எஸ்.எம்.எம்.அபூபக்கர்,ஜே.எம்.நௌபாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்..
மருதூர் கொத்தன் நினைவுப் பிரதியை மருதூர் கொத்தன் பவுண்டேசன் தலைவர் அப்துல் கபூர் கலிலுர் ரஹ்மான் பெற்றுக்கொண்டார். ஏற்புரையையும், நன்றியுரையையும் நூலாசிரியர் றகுமான் ஏ ஜமீல் வழங்கினார்;. 
மருதூர் கொத்தன் பவுண்டேசன் அனுசரணையில் மருதமுனை புதுப் புனைவு  இலக்கிய வட்டம் இந்த நூலை வெளியீடு செய்தது.இந்த நிகழ்வில் கவிஞர்கள்,கதைஞர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.  


கருத்துரையிடுக

 
Top