அம்பாறை மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் மூலை  முடுக்குகள் எல்லாம் வறியவர்கள் ,துன்பப் படுகின்றவர்கள் ,அனாதைகள் என்போர் எங்கு  வாழ்கின்றார்களோ அவர்களை தேடிச் சென்று  அவர்களுக்கு உதவும்  கரமாக கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் விளங்குகின்றார் . அந்த வகையில் திருக் கோவில்  பிரதேசத்துக்கு சென்று நடக்க முடியாத குடும்பஸ்தர் ஒருவருக்கு  உதவி வழங்கி உள்ளார் .

சமூக சேவையாளர் கனகராசாவின்  அனுசரணையுடன்  திருக்கோவிலில் விபத்துக்குள்ளாகி  இடுப்பின் கீழ் பகுதி செயலிழந்து  வீட்டில் முடங்கியுள்ள  சாமித்தம்பி ஜெயராசா (55) என்பவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப் பட்டது. 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் தலைமையில்  பாதிக்கப் பட்டவரின் வீடு தேடிச்சென்ற  சமுக சேவையாளர் கனகராசா,முன்னாள் பிரதேச செயலாளர் அழகுரத்னம் ,சமூக தர்சனம் அமைப்பின் பணிப்பாளர் நந்தபாலு ஆகியோர் அவரது குடும்பத்தவர்களுக்கு  உதவிகளும் வழங்கி வைக்கப் பட்டதுடன் பாதிக்கப் பட்டவருக்கு  சக்கர நாற்காலியும் வழங்கி வைத்தனர் .    
கருத்துரையிடுக

 
Top