எட்டாவது பாராளுமன்றத்துக்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களை தௌிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இன்றும் (10) நாளையும் (11) நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கு இன்று காலை 8.30 மணிக்கு பாராளுமன்ற செயற்குழு அறை இல. 1இல் ஆரம்பமாகி மாலை 5.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை, நாளை (11) காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இக்கருத்தரங்கில் சர்வதேச பாராளுமன்ற நிபுணர்கள் சிலர் கலந்துகொள்ளவுள்ளதுடன் அவர்களுடைய அனுபவங்களை பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top