( அப்துல் அஸீஸ்​ ) கல்முனை மனித வள அபிவிருத்திக்கான அமைப்பினால், கல்முனை முகையதீன் ஜும்ஆ  பள்ளிவாசலுக்கு  சூரிய சக்தியில்  இயங்கும்  நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18)  ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து  இடம்பெற்றது.

சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான இவ் இயந்திரத் தொகுதி பள்ளிவாசல் வளாகத்தின்  தோட்டப் பராமரிப்பின் பொருட்டு குறித்த  அமைப்பினால்  வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை மனித வள அபிவிருத்திக்கான அமைப்பின் தலைவர்  எஸ்.ஏ. சமட் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் கல்முனை முகையதீன் ஜும்ஆ  பள்ளிவாசல் தலைவர்  வைத்திய கலாநிதி  எஸ்.எம்.ஏ.அஸீஸ்,  செயலாளர் எம்.வை .ஏ. ரசாக்,  மனித வள அபிவிருத்திக்கான அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.எம்.இப்ராகிம் ஆகியோர் உட்பட அமைப்பின் நிர்வாகிகள் பலரும்  கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top