( எல்.அப்துல் அஸீஸ் ) சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விழிபூட்டலும்,   கரையோர சுத்திகரிப்பு வேலைத்திட்டமும் இன்று (22) கல்முனை கடற்கரைப்பிரதேசத்தில் இடம்பெற்றது.

'அழகிய கடற்கரைப்பிரதேசத்தை சுத்தமாக பேனுவோம்'  என்ற தலைப்பில்  கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகமத் கனி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதேசசெலக உத்தியோகத்தர்கள், பதுகாப்புப்படையினர், கிராம மக்கள் அமைப்பின் அங்கத்தவர்கள், மாநகர சபை   ஊ ழியர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top