கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இன்று(2015.09.16) தலைவர் மர்ஹூம் MHM.அஸ்ரப் அவர்களின் 16வது வருட நினைவுப் பேருரையும்,துஆ பிரத்தனையும் இடம்பெற்றது.

   கல்லூரி அதிபர்  பீ.எம்.பதுர்தீன்  தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக  விளையாட்டு துறை  பிரதி அமைச்சர் HMM.ஹரிஸ் , கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  உட்பட  ஆசிரியர்கள் பலரும்  கலந்து கொண்டதுடன்  துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தப் பட்டது .

அரசியல் அனாதைகளாக இருந்த தமது சமூகத்துக்கு  விடிவெள்ளியாக வந்த  எமது தலைவரின் இழப்பு என்றுமே ஈடு செய்துவிட முடியாது . ஆனால் அவரால் முன்னெடுக்கப் பட்ட  திட்டங்களை  நாம் முன்னெடுத்து செல்வது  அவருக்கு நாம் செய்கின்ற கைமாறாக அமையும் என்று பிரதி அமைச்சர் ஹரீஸ் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் பொது தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top