அமைச்சர் றிஷாத்பதியுதீன் 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று அம்பாரை மாவட்டத்தில் தங்கி பொதுத் தேர்தலில் மயில் சின்னத்திற்கு வாக்களித்த கட்சியின் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
நேற்று சனிக்கிழமை நட்பிட்டிமுனைக்கு  வருகை தந்ந அமைச்சர் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  கல்முனை  மாநகர சபை உறுப்பினரும்  கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சீ.எம்.முபீத் தலைமையில்  அவரது இல்லத்தில்  நடை பெற்ற  நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர் .
வருகை தந்த  அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,பிரதி அமைச்சர்  அமீர் அலி ,பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி ,இஷாக் ஹாஜி  ஆகியோரை பட்டாசு வான்பிழக்க தாய்க்குலத்தின் குரவை ஓசை முழங்க மகத்தான வரவேற்பு வழங்கப் பட்டது .
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அங்கு உரையாற்றுகையில் எமது கட்சி அம்பாறை மாவட்டத்தில் காலூன்றுவதற்கு களம் அமைத்தவர் சகோதரர் முபீத் ஆவார். அவர் என்னை சந்திக்கும் போதெல்லாம் ஊர்,ஊர் என்றே பேசுவார் ஊருக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவரது நல்ல நோக்கத்தினால் அவரது ஊரான நட்பிட்டிமுனைக்கு எங்களால் முடியுமான பங்களிப்புக்களை வழங்கி கொண்டிருக்கிறோம் .    மலர்ந்துள்ள நல்லாட்சியில்  எனக்கு கிடைத்துள்ள  இந்த அமைச்சின் மூலம்எதிர் காலத்தில்  நட்பிட்டிமுனையில் உள்ள இளைஞர் ,யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளேன்  அந்த விடயத்தில்  என்னுடன் தம்பி முபீத்  மிகவும் தொடர்புடையவராக இருக்கிறார்.
கடந்த பொது தேர்தலில்   பல தியாகங்களுக்கு மத்தியில் திகாமடுள்ள மாவட்டத்தில் 33000 வாக்குகளை மக்கள் நமது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்கியும் எம்மால் பிரதிநிதித்துவதை பெறமுடியாமல் போனது  எமக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது . அதற்காக நாம் நீதி மன்றத்தை நாடி நியாயம் பெறவுள்ளோம் .
நட்பிட்டிமுனையில்  எமது கட்சிக்கு நல்லதொரு இளைஞர்  குழாம்  இயங்கி கொண்டிருக்கிறது அதனை சகோதரர்  சி.எம்.ஹலீம் முன்னெடுக்கின்றார் . அவரது வழிகாட்டலில் இளைஞர்  காங்கிரஸ் போராளிகளின் தேவைகள் எனக்கு அடையாளப் படுத்தப் பட்டிருக்கின்றன . அம்பாறை மாவட்டத்தில் அமையப் பெறவுள்ள தொழில் பேட்டையில் நட்பிட்டிமுனையில் உள்ள இளைஞர் , யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார் 
கருத்துரையிடுக

 
Top