கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மாநகர சபை  செயலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய நகருக்கான வரைபடத்திலுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. 800 ஏக்கர் காணி நகர அபிவிருத்திக்கென சுவீகரிக்கப் படவுள்ளதுடன் முதல் கட்டமாக 200 ஏக்கரை சுவீகரிப்பு செய்து நஷ்ட ஈடு வழங்குவதற்கு  உரித்தான நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளன . 
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் உதவிச் செயலாளர் பொறியியலாளர் ரமேஷ் அவர்கள் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் தொழில் நுட்ப விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி அமைச்சின் உயர் அதிகாரிகள் கல்முனைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்,கல்முனை மாநகர முதல்வர்  நிசாம் காரியப்பர், பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் பிரதேச  செயலாளர்கள் உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.கருத்துரையிடுக

 
Top