சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கல்முனை  பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி பிரிவினால் வறிய மாணவர்களுக்கு சிசு திரிய புலமை பரிசு சான்றிதழ்  மற்றும் பாதணிகள்  வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிமை கல்முனை  பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளர் எம்.எச்,முகம்மட்  கனி  தலைமையில் நடைபெற்றது.
இதன் போது, திவிநெகும  உதவி பெறும்  குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்  65 பேருக்கு  தலா வருடத்துக்கு 6000 ரூபாவுக்கான  சிசு திரிய  புலமை பரிசு நிதியாக 3இலட்சத்து 90ஆயிரம்  ரூபா நிதிக்கான சான்றிதழும் , 20 மாணவர்களுக்கு  பாதணிகளும்  வழங்கப்பட்டன. கல்முனை பிரதேசத்தில் உள்ள தனவந்தர்களின் நிதி உதவியில் இந்த புலமை பரிசு வழங்கப் பட்டது.

இந்நிகழ்வில்  மாவட்ட திவிநெகும பணிப்பாளர் சந்துருவன் அனுருத்த பிரதம அதிதியாகவும் , திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் , திவிநெகும மகா சங்க முகாமையாளர் திருமதி எஸ்.எஸ்.பரீரா ,திவிநெகும திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர்,திவிநெகும வங்கி முகாமையாளர் எம்.எம்.முபீன்,திவிநெகும மகா சங்க உதவி முகாமையாளர் எம்.எம்.எம்.மன்சூர் ,திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத் ,திவிநெகும வளைய உதவி முகாமயாளர்களான எஸ்.எல்.ஏ.அஸீஸ் ,ஏ.எம்.நஸீர் ,திவிநெகும முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாயிதீன் உட்பட திவிநெகும உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top