அரச நிர்வாக சேவைக்கு 218 அதிகாரிகளை புதிதாக இணைத்து கொள்ள பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.கடந்த வருடம் நடத்தப்பட்ட போட்டி பரீட்சைக்கு அமைய இந்த அதிகாரிகள் இணைத்து கொள்ளப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.
பகிரங்க போட்டி பரீட்சையின் மூலம் அரச சேவைக்கு 172 அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இணைத்து கொள்ளப்பட உள்ள அதிகாரிகளுக்கு அடிப்படை பயிற்சிகளுடன் தொழில் சம்பந்தமான ஒழுக்கநெறி பயிற்சியும் வழங்கப்படும்.
இதன் பின்னர், அவர்கள் வெற்றிடங்கள் உள்ள இடங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர் எனவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top