பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக விசேட முத்திரை தபால் வசதிகளை வழங்கும் நடவடிக்கை நாளை (01) தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது என்று தபால் மா அதிபர்  டி.எம்.பி.ஆர். அபயரத்ன கூறியுள்ளார்.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த வசதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து உறுபினர்கள் பதவி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்ப வழங்கப்பட்டிருந்த வரப்பிரசாதமும் இடைநிறுத்தப்பட்டது.

  நாளை புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றுள்ளதையடுத்து மீண்டும் அவ்வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து அஞ்சல் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top