இந்தியாவில் இருந்து சுற்றுலா விடுதியில்  இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் ஈடு பட்ட இந்தியர் நால்வர் கல்முனையில் வைத்து பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

நேற்று கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட வாடி வீட்டு  வீதியில் விடுதி ஒன்றில் வைத்து இவர்கள் நால்வரும் கைது செய்யப் பட்டுள்ளனர் .

குறித்த நால்வரும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுர்வேத மூலிகை மருந்துகளும் அழகுசாதனப் பொருட்களும் வைத்திருந்துள்ளனர் . குறித்த நபர்கள் தொடர்பாக  புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலை அடுத்து  தங்களுடன் வைத்திருந்த பெறுமதியான மருந்து வகைகளுடன் கல்முனைப் பொலிசாரினால் நேற்று இரவு கைது செய்யப் பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டு விசாரிக்கப் படுவதுடன்  கல்முனை நீதிவான் முன்னிலையில்  முன்னிலைப் படுதவுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top