அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அம்மன் மகளிர் இல்ல மண்டபத்தில் நடைபெற்ற தையல் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தனியான தொழிற்பயிற்சி கட்டிடம் ஹெல்ப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்டு கட்டிட திறப்பு விழா  நேற்று 01.08.2015 ம் திகதி அம்மன் இல்ல திட்ட இணைப்பாளர் திரு.வே. வாமதேவன்  தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹெல்ப் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு. கேவின், திருமதி.கே.நற்சா போன்றோர்கள் கலந்துகொண்டதுடன் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுவிப்பாளர்கள் செல்வி எல்.  நிருஜா, செல்வி .வி. வியோகனந்தி, அம்மன் இல்ல முகாமையாளர் செல்வி மா.குமுதினி, பொருளாளர் திருமதி.க.ராதிகா மற்றும் பயிலுனர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது பயிலுனர்களால் உற்பத்தி செயப்பட்ட தையல் சார்ந்த  அலங்காரப் பொருட்கள்    புதிய கட்டிடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  
கருத்துரையிடுக

 
Top