(.அப்துல் அஸீஸ்​ )  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்   தேர்தல் பிரச்சாரக்கருத்தரங்கு  இன்று இரவு (02) அதன் செயலாளர் நாயகம்  சட்டத்தரணி வை .எல்.எஸ்.ஹமீட்டின் கல்முனை அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

இப் பிரச்சாரக்கருத்தரங்கில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த அரசியல்துறைசார் ஆர்வலர்கள் பலர் கட்சியின் செயலாளர் நாயகம்  வை .எல்.எஸ்.ஹமீட் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இனைந்துகொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  போட்டியிடும் 7ஆம்  இலக்க வேட்பாளர் எம்.எ.கலீலுர் ரஹுமான் தலைமையில் இடம்பெற்ற இப் பிரச்சாரக்கருத்தரங்கில்  கட்சியின்  செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை .எல்.எஸ்.ஹமீட், ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளரும்- கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபையின் பொருளாளருமான  சட்.எம். நதீர் மௌலவி உட்பட தேர்தளில்   போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.கருத்துரையிடுக

 
Top