கல்முனை தமிழர்களுக்கான தனி பிரதேச செயலகத்தை  வீரம் பேசுபவர்களால்  உங்களுக்கு பெற்றுத்தர முடியாது. அந்த விடயம் என்னால்தான் நிறைவேற்றப் படும் . கடந்தகால  அனுபவங்கள் என்னிடம் இருக்கின்றன. 

அரசியல் என்பது இனவாதம்  பேசி  வீரம் பேசுவதால் சாதித்துவிட முடியாதது  நாவிதன்வெளி பிரதேச செயலகம் , பிரதேச சபை ,காரைதீவு பிரதேச சபை  எனது புத்தி சாதுரியத்தால்  உருவாக்கப் பட்டது . அமரர்  அஷ்ரப்புடன்  சுமுகமான உறவை ஏற்படுத்தி  அதற்க்கான நடவடிக்கைகளை எடுத்தேன் . அதே போல் கல்முனை தமிழர்களுக்கான பிரதேச செயலகத்தையும் சுமுகமாக பேசி பெற்றுக் கொள்ளலாம் .
இவ்வாறு  கல்முனை இரண்டாம் குறிச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு  வேட்பாளருமான குணசேகரம் சங்கர் தெரிவித்தார் .

சிவசுந்தரம் புண்ணியநாதன்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் செயலகத்தை திறந்து  வைத்து  உரையாற்றும் போதே  சங்கர் மேற்கண்டவாறு பேசினார் . கருத்துரையிடுக

 
Top