- முஸ்னீ இப்னு முகம்மது நாபி -

மருதமுனை செஸ்டோ ஸ்ரீலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான “செஸ்டோ சமய கலாச்சாரப் பேரவையின்” வழிகாட்டலில் இயங்கிக்கொண்டிருக்கும் மருதமுனை இறை இல்ல பணியாளர்கள் சங்கத்தின் ஈராண்டு பூர்த்தி நிகழ்வும் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கலும் அண்மையில் (31.07.2015) மருதமுனை மஸ்ஜிதுந் மனாரில் செஸ்டோ சமய கலாச்சாரப் பேரவையின் பிரதித் தலைவா; அல்-ஹாபிழ் மௌலவி எம்.எச்.எம். அஸ்ஹர்  தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மருதமுனை பாண்டிருப்பு பொpயநீலாவணை அக்பா; கிராமம் பிரான்ஸ் சிட்டி 65 மீட்டா; வீட்டுத் திட்டம் இஸ்லாமிக் றிலீப் வீட்டுத் திட்ட பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின்மார்களை அங்கத்தவா;களாகக் கொண்டு 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இறை இல்ல பணியாளர்கள் சங்கமானது ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளிலும் வெவ்வேறு பள்ளிவாசல்களில் தனது மாதாந்த அமர்வுகளை நடாத்திவருவதுடன் அவர்களின் வாழ்வாதார விடயங்கள் தொடா;பாகவும் எதிர்கால நலன்சார் விடயங்கள் வினைத்திறமையான சேவைக்கான பயிற்சி வகுப்புக்கள் மற்றும் ஏனைய துறைசார்  விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடி மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது.

இறை இல்ல பணியாளா;கள் சங்க அங்கத்தவர்கள் மிகக் குறைந்த வருமானத்துடன் தனது குடும்பத்தை பராமரித்து வருபவர்களாக காணப்படுகின்றனர்  எனவே இவர்களின் ஆரோக்கியம் வாழ்வாதாரம் சமூக அந்தஸ்து ஓய்வுக்குப் பின்னரான குடும்ப நல செயற்பாடு சேவை மேம்பாட்டுக்கான வழிகாட்டல்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனான உறவு  பொது வேலைத்திட்டங்களில் பங்களிப்பு போன்ற அத்தியவசிய வேலைத்திட்டங்களை எதிர் வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் செஸ்டோ சமய கலாச்சாரப் பேரவை மேற்கொள்ளவுள்ளதாக ஈராண்டு நிறைவு  நிகழ்வில் கலந்துகொண்ட செஸ்டோ சமய கலாச்சாரப் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகர்  அஷ்ஷெய்க் எப்.எம் அன்சார் மௌலானா நளீமி குறிப்பிட்டாh;.

இறை இல்ல பணியாளர்களின் மாதாந்த சம்பளம் மிகவும் குறைவாகக் காணப்படுவதனால் அதற்கான திட்டமிட்ட முறைமையொன்றை அறிமுகப்படுத்தி அவா;களுக்கான சம்பளத்தை அதிகரிக்கச் செய்வதுடன் அவர்களின் எதி;ர்கால செயற்பாட்டிற்கான சேமிப்பொன்றையும் ஏற்படுத்த வேண்டும். அத்தோடு எதிர்;காலத்தில் இளைஞர்களை இப் பணிக்காக கூடுதலாக இணைக்கும் வேலைத்திட்டத்தினையும் விழிப்புணர்வினையும் நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும் என இந்நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்துகொண்ட தொழிலதிபர்  அல்-ஹாஜ் ஏ.ஆர்;.எம். றஹ்மதுல்லாஹ் குறிப்பிட்டார்;. அத்தோடு இறை இல்ல பணியாளர்;கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மட்டத்திலும் இளைஞர்கள் மட்டத்திலும் “அதான்” - “இகாமத்” சொல்லும் போட்டி நிகழ்சிகளை நடாத்துவதற்கான அனுசரணையை வழங்குவதாகவும் தொpவித்தார் 

இந்நிகழ்வில் சுமார்; 15 முஅத்தின்மாருக்கான அங்கத்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் வாழ்வாதார அன்பளிப்பும் வழங்கப்பட்டது. செஸ்டோ ஸ்ரீலங்காவின் மசூரா சபை உறுப்பினா;கள் மற்றும் செஸ்டோ சமய கலாச்சாரப் பேரவையின் உறுப்பினா;களும் இந்நிகழ்வில்  கலந்து சிறப்பித்தனர் .
கருத்துரையிடுக

 
Top