(.அப்துல் அஸீஸ்​ )


எதிர் வரும்  17ஆம் திகதி நள்ளிரவுக்குப்பின் ஏற்படப்போகும் அடுத்த ஆட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் இந்த நாட்டின் பலமான அங்கமாகவும், ஆட்சியின் பலமான பங்காளியாகவும்மிருந்து, மிக பெரும் அபிவிருத்திக்கு வழிகோலுவதுடன் எங்கள் உரிமைகளையும் வென்றெடுப்போம் மற்றும் இங்கு சாய்ந்தமருது பிரதேச சபை ஒன்றை நிறுவுவோம்  என    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சியின் தலைவர்  அமைச்சர்  றவுப் ஹக்கீம்  தெரிவித்தார்.
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் மூன்று  வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இரவு (31) சாய்ந்தமருது கடற்கரை மைதானத்தில்  இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும்  உறையாற்றுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அம்பாறை மாவட்டத்தின் நீலாவணை  தொடக்கம் பொத்துவில் வரை  கரையோர வடிகான் வேலைத்திட்டதுக்காக  18,000மில்லியன் செலவில் அபிவிருத்திவேளைத் திட்டங்களை மேற் கொள்ளவுள்ளளோம். இதனை ஆரம்பமாக கொண்டு எதிர் வரும் நாட்களில் இப்பிரதேசம்களில் அபிவிருத்தி யுகம் ஒன்றையே உருவாக்கவுள்ளோம் எனக்கூறினார். கருத்துரையிடுக

 
Top