(பி.எம்.எம்.ஏ.காதர்)
அமானா வங்கியின் தானியங்கி பணம் வழங்கும்ATM இயந்திரம் நேற்று செவ்வாய்க்கிழமை (25-08-2015 பெரிய நீலாவணை பிராதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில்  திறந்து வைக்கப்பட்டது.
இங்கு அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முகம்மட் அஸ்மீர் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அமானா வங்கியின் பிரதித் தலைவர்களான எஸ்.குவாசித்,சித்தீக் அக்பர்,அலிவாஹிட் ஆகியோருடன் கல்முனை அமானா வங்கிக் கிளையின் முகாமையாளர் முகம்மது சமீம்,வாடிக்கையாளர் உறவு  முகாமையாளர் எம்.எம்.முகம்மது ஆசிப் ஆகியோருடன் வங்கி உத்தியோத்தர்களும்,வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். 
கருத்துரையிடுக

 
Top