இந்த ஆண்டின் மூன்றாம் தவணைக்காக அனத்து தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த மற்ற அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்பம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த. உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பாடசாலைகள் வரும் 28ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் வரும் 15ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இது தவிர க.பொ.த. உயர்தர பரீட்சை செப்டம்பர் மாதம் 8ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top