ஓட்டமாவடி தியவட்டுவான் அரபா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று 18 விஜையம் ஒன்றினை மேற்கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் விஜையத்தில் குறிப்பிட்ட பாடசாலைக்கு நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல்லினை நட்டிவைத்த முதலமைச்சர் அங்கு மக்கள் சந்திப்பொன்றினையும் மேற்கொண்டார்.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.கஸ்ஸாலி தலைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி,எம்.அஷ்ரப், மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரை சந்தித்த தமிழ் மக்கள்  பலரின் பிரச்சினைகளுக்கு  உடனடி தீர்வும் வழங்கப் பட்டது.


கருத்துரையிடுக

 
Top