முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நியமிப்பதென சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அறுவர் கொண்ட குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடியாது என இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த நிலையிலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அறுவர் கொண்ட குழு அதிரடியாக இந்த அறிவிப்பைச் செய்துள்ளது.
இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு கருதினாலும் அது கருத்தில் கொள்ளப்படப் போவதில்லை என்றும் சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் கொண்ட குழு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜோன் செனவிரத்ன,குமாரவெல்கம, ரி.பி எக்கநாயக்க, சுசில் பிரேம்ஜயந்த்,திலான் பெரேரா, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கொண்ட குழுவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற பொது தேர்தலில் சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெயரிடப்பட்டால் தான் அரசியலை விட்டு விலகுவதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியில் மைத்திரி – மஹிந்தவை இணைப்பதற்காக செயற்படும் உறுப்பினர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
SLFP committee decides on MR for PM post

The six-member committee appointed by the Sri Lanka Freedom Party (SLFP) has unanimously decided to nominate former president Mahinda Rajapaksa as the party's prime ministerial candidate no matter what President Maitripala Sirinsena's views are on this matter, informed sources said. SLFP Vice Chairman and Minister Rajitha Senaratne told the weekly Cabinet meeting that the president had categorically stated that Mr. Rajapaksa would not be nominated for the general elections. However, the committee comprising Chief Opposition Whip John Seneviratne, MPs Kumara Welgama, T.B. Ekanayake, Susil Premajayantha, Dilan Perera and Anura Priyadarshana Yapa has decided otherwise and was expected to convey its position to the President yesterday. Meanwhile, the other political parties promoting Mr. Rajapaksa's candidacy for prime minister are said to be awaiting the stance of the President before deciding on the next step. The committee is expected to notify the President's views on this matter. (Kelum Bandara) 

கருத்துரையிடுக

 
Top