சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை உருவாக்கும் பொருட்டு பொது நிர்வாக உள்ளூராட்சிஅமைச்சின் செயலாளர் அவர்களால் சமர்பிக்கும் படி கூறிய

1) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக,பிரதேச செயலாளரின் சிபார்சுடன் கூடிய உள்ளூராட்சி சபை உருவாக்க கோரிக்கைப் பத்திரம்,
2) கல்முனை மாநகர சபையின் சம்மதக் கடிதம்,          
3) கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் சம்மதக் கடிதம்.
இம்மூன்று ஆவணங்களில் இரண்டு கிடைக்கப்பெற்றுள்ளன என சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கல்முனை மாநகர சபையின் சம்மதக் கடிதம் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை என சாய்ந்தமருது மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு நான்கு பேர் கல்முனை மாநகர சபையில் அங்கம் வகித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏ.எல்.ஏ.மஜீத், (இவர் சிராஸ் மீராசாஹிபின் இடத்திற்கு கட்சியால் நியமிக்கப்பட்டவர்) ஏ.எம்.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நிஸார்தீன் ஆகியோர்களே அந்த ஊர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்களாவர். இவர்களில் ஏ.எல்.ஏ.மஜீத் மாநகர பிரதி முதல்வராகவும் உள்ளார்.
இந்நிலையில் ஏன் இவர்களால் கல்முனை மாநகர சபையின் சம்மதக் கடிதத்தைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என சாய்ந்தமருது மக்களால் கேள்வி எழுப்பப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையாகவே இவர்களுக்கு சாய்ந்தமருது ஊர் மீதும் சாய்ந்தமருதில் வாழும் மக்கள்மீதும் அக்கறை இருந்தால் கல்முனை மாநகர சபையின் சம்மதக் கடிதத்தை உடனடியாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் இல்லையேல் மக்களால் இவர்களுக்கு வழங்கப்பட்ட அமானிதமான பொறுப்பிலிருந்து மரியாதையுடன் விலகிவிடல் வேண்டும் என்றும் அவ்வூர் மக்களால் இவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
இதைவிடுத்து இரண்டு பக்கமும் நடிக்கும் விளையாட்டை தற்போது விளையாடிவிட்டு சாய்ந்தமருது மக்களிடம் அரசியல் செய்வதற்கு எதிர்காலத்தில் வரவே கூடாது எனவும் அந்த ஊர் மக்கள் அவர்களுக்கு கண்டிப்பான எச்சரிக்கையும் விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

 
Top