(எம்.எம்.ஜபீர்)
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் அவர்களின் 8 ஆவது ஆண்டு கத்தமுல் குர்ஆனும், துஆப் பிரார்த்தனையும், இப்தார் நிகழ்வும் அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை  2015.06.19 வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதி கட்டிடத்தில் இடம்பெறவுள்ளது.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் தலைவர் வை.பீ .சலீம் தலைமையில்  நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மார்க்க செற்பொழிவினை அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் (நளீமி) அவர்களும் துஆப் பிராத்தனையை சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் அல்-ஹாஜ் யூ.எல்.மஃறூப் (மதனி), அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த உரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான எம்.ஏ.எம்.பௌசர், கலாநிதி  எம்.எம்.எம்.பாஸில், கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர்கள் நிகழ்த்தவுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top