ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தடையை தொடர்ந்தும் மீறிவரும் அந்த கட்சியில் உள்ள மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குருணாகல் நகரில் இன்று நடைபெற்ற மகிந்த ஆதரவு கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.

குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, குமார வெல்கம, வீ.கே. இந்திக, காமினி லொக்குகே, கீதாஞ்சன குணவர்தன, பந்துல குணவர்தன,

சரத் குமார குணரத்ன, சரண குணரத்ன, டி.பி. ஏக்கநாயக்க, வை.ஜீ. பத்மசிறி, ஜகத் பாலசூரிய, லொஹான் ரத்வத்தே, கமலா ரணதுங்க, அருந்திக்க பெனர்ணான்டோ, பிரியங்கர ஜயரத்ன, ஜீ.எல்.பீரிஸ், அப்துல் காதர், ரஞ்சித் சொய்சா, மனுஷ நாணயக்கார, ஜானக வக்கும்புர, சேஹான் சேனசிங்க, மொஹான் சில்வா, எஸ்.சி.முத்துகுமாரன, நிஸாந்த முத்துஹெட்டிகம,

சாமிக தர்மதாச, தேனுக விதானகமகே, உதித்த லொக்குபண்டார, திலும் அமுனுகம, சரத் வீரசேகர, ஸ்ரீயானி விஜேவிக்ரம, டளஸ் அழகபெரும, ரொஸான் ரணசிங்க, எஸ்.எம். சந்திரசேன, ஜானக பிரியந்த பண்டார, தாராநாத் பஸ்நாயக்க, நிமல் விஜேசிங்க, ஜயரத்ன ஹேரத், விஜித பேரகொட, நிர்மல கொத்தலாவல, மாலினி பொன்சேகா ஆகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களைத் தவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, வீரகுமார திஸாநாயக்க மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணியை சேர்ந்த ஜயந்த கெட்டகொடவும் கலந்து கொண்டனர்.

மேலும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அனைவரும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top