(யு.எம்.இஸ்ஹாக் )
அம்பாறை  மாவட்டத்தில்  யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் ஒன்றான  திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  மண்டானை மற்றும் குடி நிலம்  பகுதிகளை வாழும்  மக்களின்  குடி நீர் தேவை , மின்சார தேவை  என்பன கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரனால் நிறைவேற்றிக் கொடுக்கப் பட்டுள்ளது 
அண்மையில்  மண்டானை ,குடிநிலம்  பிரதேசத்தில்  நடை பெற்ற நிகழ்வுகளில் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் .
இந் நிகழ்வுகளில் பொத்துவில் தொகுதி தமிழரசுக்கட்சியின் செயலாளா் காளிதாஸ், கால்நடைத் திணைக்கள மாவட்டப் பிரதிப்பணிப்பாளா் எம்.ஏ.நதீா், முன்னாள் திருக்கோவில் பிரதேச  செயலாளா் வீ. அழகரெட்ணம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்  சந்திர நேருவின் செயலாளா் தெட்சணாமூா்த்தி, தமிழரசுக்கட்சியின் திருக்கோவில் கிளைத் தலைவா் பாக்கியராஜா, நற்பிட்டிமுனை அம்பலத்தடி ஆலய பொருளாளா் கனகராஜா, சமுா்த்தி உத்தியோகத்தா் லவன் ஆகியோரும் கலந்து கொண்டனா்.கருத்துரையிடுக

 
Top