இராணுவ சேவை அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இராணுவத்தை கௌரவிக்கும் தேசிய நிகழ்வு இன்று (20) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை இராணுவ நினைவுச்சின்ன வளாகத்தில் நடைபெறவுள்ளது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில்- அமைச்சர்கள் உட்பட உயிர் தியாகம் செய்த முப்படையினரின் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பில் நடைபெறவுள்ளது.
 
20ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வு மாலை 6.00 மணி வரை நடைபெறுவுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு நினைவஞ்சலி நிகழ்வும் நடத்தப்படவுள்ளது.
 
நாட்டை மீட்கும் போரின் போது 21 000 பேருக்கும் அதிகமான படையினர் உயிரிழந்ததுடன் 12,000 பேருக்கும் அதிகமாக படையினர் அங்கவீனமடைந்தனர். அவர்களுடைய சேவை என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top