முஸ்லிம்கள் முசலி பிரதேச செயாலாளர் பிரிவில் காணிச் சட்டங்களுக்கு அமையவே மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர் .எனவே உண்மையை அறிய எவரும் நீதிமன்றம் செல்லலாம் எனத் தெரிவித்த அமைச்சர்    ரிஷாட் பதி­யுதீன் பெரும்­பான்­மை­யின சில ஊட­கங்கள் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து இன­வா­தத்தை பரப்­பு­வதை கைவிட வேண்­டு­மென்று வேண்­டுகோள் விடுத்தார்.
வில்­பத்து தேசிய வனப்­பி­ர­தே­சத்தில் முஸ்­லிம்கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தாக வெளி­யாகும் செய்­திகள் தொடர்­பாக வில்­பத்து பகு­திக்கு தெற்­கி­லி­ருந்து தமிழ், சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்கள் சனிக்­கி­ழமை அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனின் ஏற்­பாட்டில் அங்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.
அதன்­போது மறிச்­சுக்­கட்டி பள்­ளி­வா­சலில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் இவ்­வாறு தெரி­வித்தார்.அங்கு குழு­மி­யி­ருந்த பெரும்­பான்­மை­யின ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கார­சா­ர­மான கேள்­வி­க­ளுக்கு அமைச்சர் ரிஷாட் மேலும் பதி­ல­ளிக்­கையில்யுத்தம் முடிந்த பின்னர் முசலி பிர­தேச செய­லாளர் பிரிவில் மறிச்­சுக்­கட்டி, கர­டிக்­குழி, பாலக்­குழி உட்­பட பல கிரா­மங்­களில் வாழ்ந்து இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களே மீளக் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.
வேறு எவரும் அங்கு குடி­யேற்­றப்­ப­ட­வில்லை. பிர­தேச செய­லாளர், அர­சாங்க அதிபர் மற்றும் வாக்­காளர் பட்­டி­யல்கள் ஆரா­யப்­பட்டு காணிக் கச்­சேரி நடத்­தப்­பட்டு இக்­கி­ரா­மங்­களில் பூர்­வீ­க­மாக வாழ்ந்து 1990 களில் விடு­தலைப் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்டு இடம்­பெ­யர்ந்து வாழ்ந்த மக்­களே மீளக்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.
அதே­வேளை வில்­பத்து தேசிய வனப்­ப­கு­தியில் மக்கள் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை. வனத்தை நாங்­களும் மதிக்­கின்றோம். சூழலை பாது­காப்­பது எமது கடமை.வில்­பத்து காட்டில் ஒரு அங்­கு­ல­மேனும் அழிக்­கப்­ப­ட­வில்லை. 1990களில் மக்கள் வாழ்ந்த இடங்கள் பற்றைக் காணி­க­ளாக மாறி­யி­ருந்­தன. அவை துப்பு­ரவு செய்­யப்­பட்டே குடி­யேற்றம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.
இவ் பிர­தே­சங்­களில் 3க்கு மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் இருந்­தன. அவை புலி­களால் சேத­மாக்­கப்­பட்­டன. இன்று அவை புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டுள்­ள­தோடு புதிய பள்­ளி­வா­சல்­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.
இவை­ய­னைத்தும் மக்கள் வாழ்ந்த காணி­க­ளி­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றதே தவிர வில்­பத்து காடு அழிக்­கப்­பட்டு அங்கு இவை­ய­னைத்தும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக வெளி­யி­டப்­படும் செய்­தி­களில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை.
இலங்­கையின் காணிச் சட்­டங்­க­ளுக்­க­மைய காணி கச்­சே­ரிகள் நடத்­தப்­பட்டு பிர­தேச செய­லாளர், அர­சாங்க அதிபர் மற்றும் 1990க்கு முன்­ப­தான வாக்­காளர் இடாப்பு பரி­சீ­லிக்­கப்­பட்டு சட்ட ரீதி­யாக மக்­க­ளுக்கு 1/2 ஏக்கர் வீதம் காணிகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.
சட்­டத்தை மீறி இங்கு எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. எனவே எவ­ருக்­கா­வது சந்­தேகம் இருந்தால் நீதி­மன்றம் சென்று உண்­மையை அறிந்து கொள்ள முடியும். அதை விடுத்து முஸ்­லிம்­களை இலக்கு வைத்து இன­வாதப் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்­வி­டயம் தொடர்பில் குழு­வொன்று நிய­மித்து உண்­மை­களை கண்­ட­றி­யு­மாறு ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் வேண்­டுகோள் விடுத்­துள்ளேன் என்றும் அமைச்சர் தெரி­வித்தார். இதன் போது இங்கு ஏரா­ள­மான ஊர் மக்கள் கூடியிருந்தனர். ஊடகவியலாளர் மாநாடும் சூடு பிடித்தது.
மக்கள் வாழ்ந்த 1000 ஏக்கர்களுக்கு மேலான காணிகளை கடற்படையினர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் எனவே அதற்கு பதிலாக மாற்றுக் காணிகளிலும் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஆனால் வில்­பத்து காட்டில் கொண்டு போய் மக்­களை குடி­யேற்­ற­வில்­லை­யென்றும் அமைச்சர் ஆணித்­த­ர­மாக எடுத்­து­ரைத்தார்.

கருத்துரையிடுக

 
Top