பிந்திய தகவல் 
குழியில் விழுந்த சிறுமி தனது சின்னஞ் சிறு சகோதரியால் காக்கப் பட்டாள் 

ஆறு மாதங்களுக்கும் மேலாக நற்பிட்டிமுனை தச்சர் தெருவில் உள்ள  சிறிய பாலம்  ஒன்று  உடைந்து  போக்குவரத்துக்கு தடையாகவும் இடையூறாகவும் காணப் படுகின்றது.
கல்முனை மாநகர முதல்வரை சந்தித்த நற்பிட்டிமுனை அபிவிருத்திக் குழுவினர் இந்த வீதியின் அவலங்கள்   குறித்து பேசினார்களோ என்னவோ தெரியவில்லை . 

அபிவிருத்திக் குழுவினர் பேசாவிட்டாலும் அதில் அங்கத்துவம் வக்கிகும் பலரது போக்குவரத்துக்கு பயன்படும் வீதியும் இதுவாகவே உள்ளது . அபிவிருத்திக் குழவின் முக்கியஸ்தரான சி.பீ.ஹாலித்  உடைய தாய் சகோதரிகள்  மற்றும்  ஸ்ரீ.ல.மு.கா  நற்பிட்டிமுனை அமைப்பாளர்  எம்.சி. அமீர்  ஆகியோரது வீடுகள் இப்பாலத்தின் அருகாமையில் உள்ளன . அதே போன்று  ஸ்ரீ.ல.மு.கா நற்பிட்டிமுனை செயலகமும் இந்த வீதியின் முடிவில் உள்ளது .

இவ்வாறு இருந்தும் இன்னும் இவ்வீதியை கவனிக்காமல் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இருந்து கொண்டு  அபிவிருத்திக் குழுவை கல்முனை மேயரிடம் கூட்டி சென்று  கதைத்த விடயம்தான் என்ன . இந்த மக்களின் நன்மை கருதி  மேயராவது  இந்த பாலத்தை செப்பநிடுவாரா?

பிந்தி கிடைத்த  செய்தி  
இன்று மாலை  இந்த குழிக்குள் சிறுமி ஒருத்தி வீழ்ந்ததாக  அறிய முடிகின்றது .எமது செய்திப் பிரிவு  அது தொடர்பான  விபரத்தை இன்னும் சற்று நேரத்தில்  வழங்குவர் 

கருத்துரையிடுக

 
Top