சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் மாற்று அரசியல் சக்திகளை அணுகி அவர்களினூடாக இதனை பெற்றுக்கொள்ள சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுத்தந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையானது வெற்றிகொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை மு கா வினால் முழுமையாக பொறுப்பெடுத்த விடயம் தற்போது தோல்வி அடைந்திருக்கும் நிலையில் இதனை அடைந்துகொள்வதற்கென மாற்று வழியினை கையாள சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி முடிவு செய்துள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக மாற்று கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
அண்மையில் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரியவை மு கா தலைலவர் ஹக்கீம் தலைமையில் சந்தித்து இதனை வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்ற உறுதிமொழியினை 100 வீதம் நம்பிக்கொண்டிருந்த சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் உட்பட நம்பிக்கையாளர் சபையினை கடைசியில் கழுத்தறுப்பு செய்ய இருகின்ற நிலையினை உணர்ந்துகொண்ட அறிந்துகொண்ட சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி தலைமையானது தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரசின் வாக்குறுதிகளில் மாத்திரம் தங்கி இருப்பதில்லை என்கிற நிலைப்பாட்டினை தற்போது எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக சகல அரசியல் கட்சிப் பிரமுகர்களையும் சந்திப்பதற்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் தீர்மானித்திருப்பதாகவும், விரைவில் அரசியல் பிரமுகரொருவரைச் சந்திக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து அறியக்கிடக்கிறது.
இந்தப் பயணத்தின் நிகழ்கால நிலவரம் பற்றி விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறித்த இந்த சந்திப்பும் கோரிக்கையும் நடைபெறும் பட்சத்தில் மு காவின் ஏமாற்று வித்தை சமூகத்தில் பட்டவர்த்தமாக புலப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top