கல்முனை உவெஸ்லி  உயர்தர பாடசாலையில் 37 வருடங்களாக ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்ற  திருமதி கமலபூசனி  சந்திரலிங்கத்துக்கு கல்லூரியில் நேற்று பெரும் பாராட்டு விழா நடை பெற்றது.
கல்லூரி அதிபர்  வீ.பிரபாகரன் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் பிரதி அதிபர் கலையரசன் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர் .
விஞ்ஞான  பட்டதாரி ஆசிரியையான  இவர் 1976 இல் நியமனம் பெற்று கல்முனை உவெஸ்லி  உயர்தர பாடசாலையில் கற்பித்து பல மாணவர்களை உயர் நிலைக்கு கொண்டுவந்தவர் . 39 வருட ஆசிரிய சேவையின் பின்னர் நேற்று ஓய்வடைந்தார் . இவருக்கு அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்களால் கௌரவிப்பு வழங்கப் பட்டது 

இதே வேளை  ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி தேவரஞ்சனி மற்றும் இடமாற்றம் பெற்று சென்ற  ஆசிரியை திருமதி கே.புவிராஜ் ,ஆசிரியர்களான கே.விஜயகுமார் ,என்.அருள்நாதன், என்.மகேஸ்வரன் ,ஆசிரியை திருமதி நந்தபாலா ஆகியோருக்கும் கௌரவம் இடம் பெற்றதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன

கருத்துரையிடுக

 
Top