மைஹோப் குழுமியங்களின் அனுசரணையுடனும், மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆதரவுடனும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், தனது அங்கத்துவ கழகங்களுக்கிடையே, விலகல் அடிப்படையில் கடந்த இரு மாதங்களாக நடாத்திவந்த மர்ஹும், ஏ.எல்.எம்.சித்தீக் ஞாபகார்த்த மெகா கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும்  வெள்ளிக்கிழமை (இன்று) பி.ப. 3.30 மணிக்கு மருதமுனை மஷ¤ர் மெளலானா விளையாட்டுத் தொகுதியில் ஈஸ்ரன்யூத் விளையாட்டுக்கழகத்தினரும், கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகத்தினரும் மோதவிருக்கின்றனர்.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெறவிருக்கும் மேற்படி விழாவில் ஒருங்கிணைப்பாளராக மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கணக்காளருமான கே. றிஸ்வியஹ்சர், ஏற்பு விருந்தினராக மைஹோப் குழுமங்களின் தவிசாளர் சித்தீக் நதீர், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் சிறப்பு அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எம்.விக்கிரமஆராச்சி, அம்பாறை பிரதேச செயலாளர் எம்.எம்.எஸ். கே.பண்டாரமாப்பா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.

கருத்துரையிடுக

 
Top