அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப் பட்டன .
பாடசாலையின் அதிபர்  எம்.சி.எம். அபூபக்கர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடை பெற்ற வைபவத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார் ,பீ.எம்.வை.அரபாத்  ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் பிரதம முகாமை உதவியாளர் லத்தீப் ,நிதி உதவியாளர் ரஸாக் , தொழில் அதிபர் ஏ.எல்.கமால் , அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனை கிளையின்  தலைவர் ஏ.அப்துல் கையூம் ,போசகர் ஏ.மீராமொஹிதீன் ,பிரதி செயலாளர்  அபூதாஹிர்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு  மாணவர்களுக்கு  வழங்கி வைத்தனர் வைத்தனர்.கருத்துரையிடுக

 
Top