நீதிமன்ற ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கொன்று எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9.30 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
 
ஊடகவியலாளர்களின் அறிவை மேம்படுத்தி சட்டம் தொடர்பான செய்திகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களத்துடன் நீதியமைச்சு இணைந்து இப்பயிற்சிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
 
ஊடகவியல் அடிப்படை ஒழுக்கங்கள்- விழுமியங்கள்-சட்டதிட்டங்கள்- நீதிமன்ற அறிக்கையிடலின் போது ஊடகவியலாளர் பின்பற்றவேண்டிய ஒழுக்கங்கள் மற்றும் நியாயங்கள் தொடர்பாக விரிவாக இதன்போது விளக்கமளிக்கப்படும். சட்ட நிபுணர்கள்- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் வளவாளர்களாக இப்பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இக்கருத்தரங்கில் சட்டமாஅதிபர்  திணைக்களம் - சட்டமூல திணைக்களம்- சட்ட ஆணைக்குழு- என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
நீதி தொடர்பான செய்திகளில் ஆர்வமுள்ள எந்தவொரு ஊடகவியலாளரும்  இப்பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியும். இக்கருத்தரங்கில் பங்குபற்றியமைக்கான சான்றிதழும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
 

கருத்துரையிடுக

 
Top