தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளது .
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிமன்ற நீதிபதியால் இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது அக்கட்டளையில் தெரிவிக்கட்டிருப்பதாவது எதிர்வரும் பதினெட்டாம் திகதி முள்ளிவாய்க்கால் உட்பட முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடங்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாலும் ஏனையவர்களாலும் நடாத்தப்படவுள்ள  பொதுமக்கள் கலந்து கொள்ளும் பேரணியை தடுத்து நிறுத்தாவிடின் சமாதானக்குலைவு ஒன்று ஏற்படும் என மன்று கருதி குறித்த பேரணியை நடாத்தக்கூடாது என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் உட்பட ஏனைய அனைவருக்கும் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை மனு விடுக்கின்றது என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் கையொப்பம் இட்டு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

 
Top