உத்தேச  தேர்தல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது சம்பந்தமாக கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருத்தங்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க அவகாசம் வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பொது நிர்வாக,  மாகாண  சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவின் முன் ஆஜராகி தமது கருத்துக்களை சமர்ப்பிக்க முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட கலந்துரையாடலின் போது தமது பிரதேசம்  சார்பிலான ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க விரும்புகின்ற கட்சியின் அனைத்து பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும், அமைப்பாளர்களையும் மற்றும் ஏனையோரையும் தங்களது கருத்துக்களை தெளிவாக எழுதி எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக முஸ்லிம் காங்கிரஸ் செயளாளர் நாயகம் ஹஸன் அலி அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top