அமைச்சர் றிசாத் சவால் 
வில்பத்து தேசிய வனப் பகுதியில் மக்களை குடியேற்றவில்லை எனவும் அவ்வாறான குற்றச்சாட்டினை நிரூபித்தால், தான் அமைச்சுப் பதவியை துறப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வில்பத்து தேசிய வனத்திற்கு அருகில் தனக்கு சொந்தமான காணிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்திருப்பதை நிரூபித்தால் தான் அமைச்சு பதவியை துறப்பதாகவும், அனைத்து ஊடகவியலாளர்களையும் குறித்த பிரதேசத்திற்கு பகிரங்கமாக விஜயம் மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொண்டு வருமாறும் ரிஷாட் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் வில்பத்து பகுதியில் பாகிஸ்தான் நாட்டவரை குடியேற்றியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர், அப்படி யாரையேனும் குடியேற்றியிருந்தால் நிரூபித்துக் காட்டுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top