(அப்துல் அஸீஸ்​ )

கல்முனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட   உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கான 'சிப்தொற' புலமைப்பரிசில் சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு இன்று மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களிளிருந்து தெரிவுசெயப்பட்ட 20 சிறந்த பெறுபேறுகளை பெற்ற  மாணவர்களுக்கு  க. பொ.த . உயர் தரத்தில் கல்வியை தொடரும் பொருட்டு 2 வருடங்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கி  வைக்கப்பட்டது.

திவிநெகும சமுக பாதுகாப்பு நிதி தொடர்பான உத்தியோகத்தர் எம்.ஐ. மாகிரின்  ஒருங்கிணைப்பில்  இடம்பெற்ற இன் நிகழ்வில் திவிநெகும பிரதேச அதிகாரி எ.ஆர்.எம். சாலிஹ், திவிநெகும முகாமையாளர்களான எஸ்.சதீஸ், எம்.எம்.எம். முபீன், ஆகியோர்கள் உட்பட பிரதேச செயலக  அதிகாரிகள்,  திவிநெகும அதிகாரிகள் என பலரும் கலந்து கொன்டனர். 


கருத்துரையிடுக

 
Top