சாய்ந்தமருதுக்கு   நீண்ட நாள் தேவைகளுள் ஒன்றாகவிருந்து வந்த பொது விளையாட்டு மைதானம் நாளை மறுதினம்  சனிக்கிழமைதிறந்து வைக்கப்படவுள்ளது.

 திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின்  நிதி ஒதுக்கீடு மூலம் சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் தியாகங்களுடன் 
சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிடப்பட்டுள்ள சகல வசதிகளும் கொண்ட சர்வதேச ரீதியில் அமையவுள்ள கரைவாகு விளையாட்டு மைதானத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த மைதானம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்பிரதம அதிதியாகவும் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீட் , கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.எம்.பிர்தௌஸ் , ஏ.ஏ.பஸீர் , ஏ.நிஸார்தீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்றைய தினம் கண்காட்சி கிறிக்கட் போட்டியொன்று  கரைவாகு கிங்ஸ் இலவன் அணிக்கும் சாய்ந்தமருது ஸ்டார்ஸ் இலவன் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top