வானிலையில் ஏற்பட்ட கலப்பு வெப்பநிலை கால மாற்றத்தினால் இன்று (16) நாட்டின் அனைத்து பாகங்களிலும் இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு ஊவா மாகாணங்களில் மாலையில், இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் நிலவுகிறது. அத்துடன் அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவிலும் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் மேல் வடமேல் மாகாணங்களில் மற்றும் தென் மாகாணங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படும் எனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பிரதான நகரங்களின் காலநிலை

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 31 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மிதமான காலநிலை காணப்படலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 31 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 26 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் - மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மிதமான காலநிலை காணப்படும்.

மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 33 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை சிறிதளவிலான மழைக்கு சாத்தியம் காணப்படும். கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு காலையில் பனியுடன் கூடிய காலநிலை காணப்பட்டு பின்னர் மிதமான காலநிலை காணப்படலாம்.

கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக  திருகோணமலை மாவட்டத்தில் 34.2 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 13.8 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம் 

திருகோணமலை பிரதேசத்தில்   ஆகக்கூடிய மழைவீழ்ச்சியாக 54.1 மில்லிமீற்றர் பதியப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top