போரின் இறுதித் தறுவாயில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை அம்பாறை மாவட்டத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த்; தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ. கலையரசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கல்முனை முருகன் ஆலயத்தில் ஆத்ம சாந்தி பூசைகள் நடைபெற்ற பின்னர் ஆலய முன்றலில் நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகள் நினைவு கூறப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ;நாடாளுமன்ற உறுப்பினர்களான பி. செல்வராசா, பி. அரியநேத்திரன், கிழக்கு மாகாண ;விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம்,  மாகாண சபை உறுப்பினர்களான எம். இராஜேஸ்வரன், கே. கருணாகரம், ஜி. கிருஸ்ணபிள்ளை,  எம். நடராசா உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றத் தலைவர்களும் உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top