நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர்   தலைமையில் இன்று  நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர்  பிரதேச சபைக்கட்டிடத்தினை  தேசிய நீர்வழங்கல்,வடிகாலமைப்பு,நகர திட்டமிடல் அமைச்சரும் முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ரவூப்  ஹகீம்  திறந்து வைத்தார்,

இந்த நிகழ்விற்கு கிழக்குமாகாண முதலமைச்சர்  ஹாபீஸ் நசீர்,கிழக்குமாகாண  சுகாதார அமைச்சர் மன்சூர் ஆகியோருடன் ,கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான  ஆரிப் சம்சுதீன்,தவம்,சிப்லி பாரூக் , முதலமைச்சரின் செயலாளர் அசீஸ்,மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,  உட்பட மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

ஆனால்  நிந்தவூரை சேர்ந்த முஸ்லீம்காங்கிரசின் செயலாளரும் ,சுகாதார  இராஜாங்க அமைச்சருமான   MT  ஹசன் அலி , பாராளுமன்ற உறுப்பினர்  பைசல் காசீம்  ஆகியோரும்  பிரதேச சபை உறுப்பினர்களான  ஜப்பார் அலி, அன்சார்  ஆகியோரும் இந்நிகழ்வில்  கலந்துகொள்ளவில்லை. 

சில காலமாக  இரு பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும் தவிசாளர் தாகீருக்குமிடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது  எனினும் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற நிகழ்வில் பைசால் காசிம் கலந்து கொண்டுள்ளார் . 


கருத்துரையிடுக

 
Top