(பி.எம்.எம்.ஏ.காதர்)

மைஹோப் நிறுவனத்தின் ஆதரவுடனும்,மருதமுனை யுனிவேஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடனும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திய “மர்ஹும் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சித்தீக் ஞாபகார்த்த மெகா கிண்ண அழைப்பு உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித் தொடரின்  இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கடந்த வெள்ளிக்கிழமை   மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டுத் தொகுதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட சம்மேளனத்தின் தலைவரும்,.கல்முனை மாநகர சபை உறுப்பினரும்  சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் மருதமுனை யூனிவஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் ,கணக்காளருமான கே.றிஸ்வி யஹ்சர் ஒருங்கிணைப்பாளராகவும், மைஹோப் நிறுவனத்தின் தவிசாளர் சித்தீக் நதீர் ஏற்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் கலந்து கொண்டார்.சிறப்பு அதிதிகளாக  கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எம்.விக்கிரஆராச்சி,அம்பாறை பிரதேச செயலாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டாரமாப்பா,கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,   கல்முனை மாநகர சபை உறுப்பினரும், மருதமுனை கிரிக்கட் சங்கத்தின்  தலைவருமான ஏ.ஆர் அமீர்,அதிபர் எம்.எம்.ஹிர்பகான் ஆகியோரும் கலந்து கொண்டனர். 
அதிதிகளாக   அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் சிரேஷ்ட உப தலைவரும் , மத்தியஸ்தர் சங்கத்தின் தவிசாளருமான எம்.எல்.எம்.ஜமால்தீன் , பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப்,பிரதிப் பொதுச்  செயலாளர். ஏ.எம்.இப்றாகீம்(மெரிகோல்ட்) ஆகியோருடன் கழகங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். 
இந்த இறுதிப் போட்டியில் மருதமுனை ஈஸ்ட்ரன் யூத் விளையாட்டுக் கழகமும், கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகமும் பங்கு பற்றியது போட்டி மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது இறுதியில் 3-3 என்ற கோள் அடிப்படையில் போட்டி சமநிலையை அடைந்தது.
தண்டனை உதை மூலம்   வெற்றியைத் தீர்மானிக் வேண்டிய நிலை ஏற்பட்டது இருந்த போதிலும் மைதானத்தில் இருள் சூழ்ந்தன் காரணமாக போட்டியை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ஏ.எம்.றக்கீப் இரு அணித் தலைவர்களுடனும், கழகங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி இரு அணிகளையும் இணைச் சம்பியன்களாக அறிவித்தார்.  
இதனையடுத்து இரு அணிகளுக்குமான  வெற்றிக்கிண்ணத்தை பிரதம அதிதயாகக் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்  கே.விமலநாதன் வழங்கி வைத்தார்.பணப்பரிசினை அதிதிகளாகக் கலந்து கொண்ட   கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எம்.விக்கிர ஆராச்சி, அம்பாறை பிரதேச செயலாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார மாப்பா,கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
ஆட்ட நாயகர்களுக்கான விருதுகளை கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,   கல்முனை மாநகர சபை உறுப்பினரும், மருதமுனை கிரிக்கட் சங்கத்தின்  தலைவருமான ஏ.ஆர் அமீர், அதிபர் எம்.எம்.ஹிர்பகான் ஆகியோரும் வழங்கினார்கள். 
போட்டின் பிரதான நடுவராக ஆசிரியர் எம்.பி.ஏ.றசீட்,உதவி நடவர்களாக சி.எம்.அஸ்ஹர், எம்.ஏ.பர்சான்,எஸ்.எம்.உபைதீன் ஆகியோருடன் போட்டி ஆணையாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விளையாட்டுப் போதனாசிரியர் எம்.எல்.ஏ.தாஹீர் கலந்து கொண்டார். யுனிவேஸ் விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி ஆசிரியர் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.கருத்துரையிடுக

 
Top