நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானம் மற்றும் பொது சந்தை கட்டிடம் தொடர்பாக  கல்முனை மாநகர முதல்வர்  தலைமையில் ஆராயப் பட்டதாக அறிகின்றோம் . இதில் நற்பிட்டிமுனை அபிவிருத்திக் குழு கலந்து கொண்டதாக  குறிப்பிடப் பட்டுள்ளது . இந்த அபிவிருத்திக் குழுவின் உள்  நோக்கம்தான் என்ன என்பதை நற்பிட்டிமுனை மக்கள் நன்கு புரிய வேண்டும் . கேவலம்  5 வருடத்துக்கும் மேலாக கட்டப் பட்ட சந்தை கட்டிடத்தை   பல தடவைகள்  உடைத்து கட்டியும்  அதனை பலமுறை திறப்பு விழா செய்தும்  நற்பிட்டிமுனை மக்களை மடையர்களாக மாற்றி இன்னும் அந்த கட்டிடத்தை பயன் படுத்தாமல் மாநகர சபை புறக்கணித போதும் ,
விளையாட்டு மைதானத்தை அதாவுல்லா அபிவிருத்தி செய்ய முன் வந்த போது அதனை தடுப்பதற்கு பல தில்லுமுல்லுகளை செய்து , கட்டிய பார்ப்போர் அரங்கை திறக்காமல் செய்து  மாநகர கழிவுகளை மைதானத்தில்  கொட்டி நாற்றம் வீசிய போதும் ,மழை  வெள்ளத்தில் மைதானம் நிறைந்து கிடந்த போதும் 
நற்பிட்டிமுனை வட்ட விதானை வீதிக்கு வந்த பணம் கல்முனை குடிக்கு மாற்றப் பட்ட போதும் 
கரவாகு மேற்கு நூலகம் அரை குறையாக திறக்கப் பட்ட போதும் 
பிரதான வீதி  காபர்ட் இடப்பட்டு அரைகுறையுடன்  காணப் படுகின்ற போதும்  

கண் விழிக்காத அபிவிருத்திக் குழு  எப்போது ஆரம்பமானது. எதிரே வரும் உள்ளூராட்சி  தேர்தலை வைத்து ஆடும் நாடகமே அன்றி நட்பிட்டிமுனையின் அபிவிருத்தி நோக்கமல்ல .

கல்முனை மாநகர சபை வரலாற்றில்  5 முதல்வர்கள்  காலத்தில் நற்பிட்டிமுனை பள்ளிவாசல் நிருவாகதினருக்கும் ,இன்று முளைத்த அபிவிருத்திக் குழுவுக்கும்  நற்பிட்டிமுனை பற்றி பேசுவதற்கு  நேரம் கிடைத்திருக்கவில்லை . நற்பிட்டிமுனை அபிவிருத்தியில் அன்று  தன்னிறைவு அடைந்திருந்தது. இப்போது மட்டும் தான் அபிவிருத்தியில்  பின் தள்ளப் பட்டுள்ளது அதனால்தான்  காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளது.


கருத்துரையிடுக

 
Top