ஆசிய மன்றத்தின் அனுசரணையில் கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள பொது நூலகங்களுக்கு மாநகர சபையினால் பெறுமதி வாய்ந்த புதிய நூல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு வியாழக்கிழமை மாநகர சபையில் மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஆசிய மன்றத்தின் புத்தக நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி.சில்வா ஒரு தொகுதி நூல்களை முதல்வரிடம் சம்பிரதாயபூவமாக கையளித்தார். அதனை முதல்வர் நிஸாம் காரியப்பர், கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலகத்தின் நூலகரிடம் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் உட்பட கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள நூலகங்களின் நூலகர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top