அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் மேலும் மூன்று பூகம்பங்கள் நேபாளத்தில் ஏற்படலாம் என புவியிலளாளர் லலித் விஜேயரடண தெரிவித்துள்ளார். அதே நேரம் இவ்வருடத்தின் பிற்பகுதியில் இலங்கையிலும் இரண்டு நில அதிர்வுகள் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.
நான் நில அதிர்வுகள் தொடர்பாக நீண்ட காலமாக  ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். அந்தடிப்படையில் பேதுருதாலகால மலைப்பகுதியிலும் இமாலய மலைப்பகுதியிலும் பெறப்பட்ட மண் மாதிரிகளை பரீட்சித்ததன் அடிப்படையிலேயே இவ்வாறு பூகம்பங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் இலங்கை , இந்தியா , இந்தோனேஷியா , ஆகிய மூன்று நாடுகளும் ஒரே புவித்தட்டுக்குள் வந்துள்ளன. அது மிக விரைவில் பூகம்பங்கள் ஏற்படக்கூடிய புவித்தட்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top