சிறுபான்மை, சிறிய கட்சிகள் கூட்டாக முடிவு
தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட்டாலும் எதிர்வரும் பொதுத் தேர்தல் விகிதாசார முறைப்படியே நடத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் முறைமைமாற்றம் தொடர்பில் அவசர தீர்மானத்தை எடுக்காது ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான இரு தேர்தல் திருத்த யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப் பாட்டுக்கு வருவது எனவும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
வெகுவிரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் இறுதி முடிவை எட்டுவது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் முக்கிய கலந்துரை யாடலொன்றை நடத்தினர்.
இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிa ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி. பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண் டிருந்த இக்கலந்துரையாடலிலேயே மேற்படி விடயங்கள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top