நற்பிட்டிமுனை கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மூன்று தினங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கடெற் வதிவிட பயிற்சி பட்டறை பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான சீ.எம்.முபீத்தின்   பணிப்புரைக்கு அமைவாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளரும் அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான சீ.எம்.ஹலீம் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம்  இடம்  இன்று வெள்ளிக்கிழமை அதிபர் காரியாலத்தில் வைத்து பட்டறைக்கான நிதியை  கையளித்தார் .
இதன்போது  வித்தியாலய உதவி அதிபர்களான மௌலவி ஏ.எம்.சாலீத்தீன், திருமதி ஏ.எம்.முனாசீர், பகுதித் தலைவரும் சிரேஷ்ட அறிவிப்பளருமான சீ.தௌபீக், பகுதித் தலைவர் கே.எல்.ஏ.கபூர், ஆசிரியர்களான எம்.ரீ.ரம்சீன், ஏ.எம்.ரீலாஸ் ஆகியயோர்களும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top