நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா  மகா வித்தியாலயத்தில்  மூன்று நாட்கள் வதிவிடத்தைக்  கொண்ட  கடற்  பயிற்சிப் பட்டறைக்கான  ஆரம்ப நிகழ்வு  இன்று திங்கட் கிழமை  பாடசாலை வளாகத்தில் பிரதி அதிபர் வீ.எம்.ஸம் ஸம்  தலைமையில்  தலைமையில் நடை பெற்றது .
ஆரம்ப  வைபவத்தில்  பாடசாலையின் பழைய மாணவனும் , கைத்தொழில் மற்றும்  வணிகத்துறை  அமைச்சரின்  இணைப்பாளரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  கல்முனை தொகுதி இளைஞர்  காங்கிரஸ் அமைப்பாளரும் , அல் -விஸ்டோ  அமைப்பின் தலைவருமான  சி.எம்.ஹலீம் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு தேசிய கொடியை  ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .
அதே போன்று  தேசிய மாணவர் படையணியின்  17 வயதுப் படைப் பிரிவின் பொறுப்பதிகாரி  லெப்டினன் குணசேகர படைப் பிரிவின்  கொடியை  ஏற்றி வைத்ததோடு பாடசாலைக் கொடியை ,பிரதி அதிபர் வீ.எம்.ஸம் ஸம் ஏற்றி  வைத்தார் .
கடற்  பயிற்சிப் பட்டறைக்கான  ஆரம்ப நிகழ்வின் போது  பாடசாலை உதவி அதிபர்களான மௌலவி ஏ.எம்.சாலிதீன்,திருமதி ஏ.எம்.முனாசீர் , ஆகியோரும் பகுதி தலைவர் சி.தௌபீக் ,லெப்டினன் கொமாண்டர்  எம்.ரீ.ரம்சீன்  உட்பட ஆசிரியர்களும் ,கல்விசாரா ஊழியர்களும் , பயிற்சிக்கு தெரிவான  கடற் மாணவர்களும் கலந்து கலந்து கொண்டனர் 
கருத்துரையிடுக

 
Top